ஜம்முவில் 4 இடங்களில் சுற்றி வந்த டிரோன்கள்: ராணுவம் உஷார்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் விமான படை தளத்தின் மீது டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து எல்லையோர மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் ஜம்முவில் சனியன்று இரவு டிரோன்கள் சுற்றிவந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். 4 வெவ்வேறு இடங்களில் இந்த டிரோன்கள் சுற்றியதாக கூறப்படுகின்றது. சம்பாவில் சனியன்று இரவு, 2 ஆளில்லா வான்வழி விமானங்கள் சுற்றி வந்துள்ளன. இதனை தொடர்ந்து டோமனாவில் ஒரு டிரோன் வட்டமடித்துள்ளது.  சனியன்று இரவு மட்டும் 3 டிரோன்கள் நடமாட்டம் தென்பட்டுள்ளது. சம்பாவில் இரவு 8 மணி மற்றும் 9 மணிக்கும், டோமனாவில் இரவு 9.50மணிக்கும் டிரோன் சுற்றி வந்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சம்பாவின் பாரி பிரம்மனா பகுதியில் டிரோன் வட்டமடித்துள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: