அரசு போக்குவரத்து பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை செயல்படுகிறது. இங்கிருந்து 27 பஸ்கள் மற்றும் 5 ‘ஸ்பேர்’ பஸ்கள் என மொத்தம் 32 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பணிமனையில் நேற்று முன்தினம் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடந்த 3 ஆண்டுகளாக முறையான பஸ் பராமரிப்பு குறித்து போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின், தமிழகத்திலேயே 100 சதவீதம் பஸ்களை இயக்கி, உத்திரமேரூர் பணிமனை சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களை பாராட்டினார்.

மேலும், பணிமனை ஊழியர்கள் சார்பில், டயர்களை எளிதாகவும், விரைவாகவும் கழற்றி மாற்றுவதற்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள ‘ஏர் நியூமேட்டிக் கன் சிஸ்டம்’ எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப இயந்திரத்தை இயக்கி பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இந்த இயந்திரம் மூலம், ஒன்றரை நிமிடத்தில் டயர்களை கழற்றி மாட்டலாம்.

Related Stories:

>