×

ஒன்றிய அரசை கண்டித்து மருத்துவ ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

ஊத்துக்கோட்டை: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவ ஊழியர்கள் ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் கூறுகையில்: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை  அறிவிக்கும். ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த 9.1.2020ல் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டும் ஊதிய மாற்றத்தை அறிவித்துள்ளார்கள். மற்ற ஊழியர்களுக்கு இதுநாள் வரை ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இத்தகைய பாகுபாடான செயல்பாடுகள் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இதுகுறித்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குனர் ஆகியோரை பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும், தீர்வும் ஏற்படவில்லை. மேலும், தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்கள். அதற்கும் ஒன்றிய அரசு இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை.
எனவே, டெல்லியில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கம் எடுத்துள்ள முடிவின்படி ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகிறோம், என்றனர்.

Tags : U.S. government , Medical staff, struggle
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...