பேரவையின் மாண்பிற்கு பெருமை சேர்த்தவர் கலைஞர்: சபாநாயகர் மு.அப்பாவு பாராட்டு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ பட திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு வரவேற்று பேசியதாவது: தமிழகப் பேரவையில் 5 முறை முதல்வராக பொறுப்பேற்றுப் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றிய கலைஞரின் திருவுருவ படத்தை திறந்து வைக்கவும் வருகை தந்துள்ள குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றும் உரிமையை 1972 பெற்றுத்தந்தவர் கலைஞர்.

அவரது மறைவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒரு தலைவராக கலைஞருக்கு இந்திய பாராளுமன்ற இரு அவைகளிலும் விழிம்பு நிலை மற்றும் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்தவர் என்று புகழாரம் சூட்டி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டதை நான் நினைவு கூறுகிறேன். தான் சந்தித்த தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட தோல்வியை சந்திக்காமல் 13 முறை வென்று, இப்பேரவையின் உறுப்பினராகவும், 5 முறை முதலமைச்சராக இருந்து பேரவையின் மாண்பிற்கு மேலும் பெருமை சேர்ந்தவர் கலைஞர். ஆகவே, அவர்களையும் மீண்டும் ஒருமுறை பாராட்டி வரவேற்கிறேன். தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ பட திறப்பு விழா நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>