வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் மற்றும் தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான தமிழ்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிவுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.  

இவ்வாக்காளர் பட்டியல், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர், நாமக்கல் கவிஞர் மாளிகை, இரண்டாவது தளம், தலைமைச் செயலகம், சென்னை-9 என்ற அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. அதேபோன்று, தமிழ்நாடு வக்பு வாரியம், முதன்மைச் செயல் அலுவலர், சென்னை-1 மற்றும் அனைத்து மண்டல வக்பு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது. தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படும்.

Related Stories:

>