×

மாய வித்தை காட்டிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை

நன்றி குங்குமம் தோழி

வானத்தில் 3 முறை சுழன்று ‘சிமோன் பைல்ஸ்’ காட்டிய மாய வித்தை இணையவாசிகளின் லேட்டஸ்ட் டாக். அமெரிக்காவை சேர்ந்த 22 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். கடந்த வாரம் முழுதும் தன்னை இணையத்தில் தேடவைத்தவர். ஜிம்னாஸ்டிக்கில் இவர் அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் அவர் 1 முறை 2 முறை அல்ல 3 முறை வானத்திலேயே சுழன்று காட்டிய மாய வித்தை ரசிகர்களின் கண்களை அப்படியே கட்டிப் போட்டது. தனது திறமையால் வானத்தில் இவர் சரவெடி வித்தையே நிகழ்த்திக் காட்டினார்.

இவரது ஜிம்னாஸ்டிக் வீடியோவை பார்த்த அனைவருமே ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். இவரின் வித்தைகளை நேரடியாக விளையாட்டு அரங்கில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் அப்படியே வியப்புக்காட்டி, கரகோஷங்களை எழுப்பி ஆர்ப்பரித்தனர். அவர் விளையாடி முடித்த சற்று நேரத்தில் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை வெகுவாய் ஆட்கொண்டது. கூகுளில் அதிகப்படியானோர் தேடிய வீடியோவாக சிமோன் பைல்ஸ் வீடியோ இடம் பெற்றது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சிமோன் பைல்ஸ் தங்கம் வெல்லாமல் இதுவரை நாடு திரும்பியதே இல்லை. ஒரே ஒலிம்பிக்சில் 4 தங்கம் வென்ற 5வது வீராங்கனை என சிறப்பு பட்டத்தையும் பெற்று புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார். தனது இளம் வயதிலேயே இவர்அடைந்திருக்கும் வெற்றிகள், பெற்றிருக்கும் பட்டங்கள், வசமாக்கிய விருதுகள் ஏராளம். உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில், 14 தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்த‌தன் மூலம், உலகின் தலைசிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் சிமோன் பைல்ஸ்.  

தொகுப்பு: மகேஸ்வரி

Tags : heroine ,
× RELATED இமெயில் படத்துக்காக பிகினியில் நடித்த ராகினி திவேதி