டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,454 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,22,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,52,447 ஆக உயர்ந்தது.* புதிதாக 4,454 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,37,28,011 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27,20,716 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இதன் மூலம், நாட்டின் இதுவரை 19,60,51,962 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.