×

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தீர்ப்பு 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாக்டர் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, இவரை கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினர் வெட்டி கொலை செய்தது. இதில் அவர் தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை அவரது நிலத்துக்காக நடந்தது என தெரியவந்தது. இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டபட்ட 10 பேர்களில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு மருத்துவர், ஒருவர் இன்ஜனியர், மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினந்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி வாதாடி வந்தார். அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர்.

173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட இருந்தது. அதற்காக வழக்கு நேற்று காலை முதலாவது செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முதல் 2 குற்றவாளிகளான பொன்னுசாமி, மேரிபுஷ்பம் ஆகியோர் உடல்நிலை சரியில்லை என்று கூறி மனுதாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிபதி தீர்ப்பை 4ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags : Subbaiah ,Sessions Court , Judgment in Dr. Subbaiah murder case adjourned to 4th: Sessions Court orders
× RELATED அமலாக்கத்துறை வழக்கிலிருந்து...