காவிரி பிரச்சனையில் ஒன்றிய அரசும், பாஜக கட்சியும் கபட நாடகம் ஆடுகின்றன!: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

திருவாரூர்: காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதை உணர்த்தும் பிரதமர், ஆணையத்தை முடக்கும் நோக்கத்தோடு நிர்பந்தம் கொடுத்து வருவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி பிரச்சனையில் ஒன்றிய அரசாங்கமும், பாஜக கட்சியும் கபட நாடகம் ஆடுகின்றன என்றார்.

மேலும் காவிரி மேலாண்மை ஆணைய அனுமதி இல்லாமல், உச்சநீதிமன்ற அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்பதை பிரதமர் உணர்ந்தும் ஆணையத்தை முடக்கும் நோக்கத்தோடு அனுமதி கொடுக்க நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறார். தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறி இருக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய பி.ஆர்.பாண்டியன், இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் விவசாயிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: