அமைச்சர் சக்கரபாணி தகவல் 3 லட்சம் புது ரேஷன் கார்டுக்கு இந்த மாதமே பொருள் சப்ளை

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற்றுக்கொண்ட 3 லட்சம் பேர், இந்த மாதத்தில் இருந்தே உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகரில் புதிய ரேஷன் கார்டுகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ‘‘தமிழகத்தில் புதிய ரேஷன்கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ரேஷன் கார்டு பெற்றுக்கொண்ட 3 லட்சம் நபர்கள் இந்த மாதத்திலிருந்தே உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 8000 ரேஷன் கடைகள் சொந்தக் கட்டிடத்தில் இயங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.

Related Stories:

More
>