7வது பதக்கம் வென்ற எம்மா!

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வேட்டையில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்களை வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார். மகளிர் 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் நேற்று ஒலிம்பிக் சாதனையுடன் (23/81 விநாடி) தங்கம் வென்ற அவர், ஒரு ஒலிம்பிக் தொடரில் 7 பதக்கம் வென்ற முதல் நீச்சல் வீராங்கனை என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். டோக்கியோ ஒலிம்பிக்சில் அவர் 4 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை முத்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மரியா கோரோகோவ்ஸ்கியா 7 பதக்கம் வென்றதே ஒலிம்பிக்சில் அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையையும் எம்மா சமன் செய்துள்ளார்.

Related Stories: