கோயிலில் உள்ள கற்சிலை, நகை ஐம்பொன் சிலை விவரம்் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதா?.... அறிக்கை அளிக்க ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு

சென்னைஅறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில், 34 உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு, அதில் 11 மையங்கள் செயல்படவில்லை. 11 உலோக திருமேனி பாதுகாப்பு மையங்களை பயன்பாட்டில் ெகாண்டும் வரும் பொருட்டு முதற்கட்டமாக எந்தெந்த கோயிலின் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க வேண்டியவை என்பது குறித்தும் மற்றும் கோயில் தெய்வ திருமேனிகள் விவரம், ஆகியவற்றுடன் ஆணையர் அனுமதி பெற முன்மொழிவினை அனுப்பி வைக்குமாறு இணை ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோயில்களில் உள்ள கற்சிலைகளின் எண்ணிக்கை, மொத்த கற்சிலைகளில் படம் எடுத்து கடந்த 2021 ஜூன் மாதம் வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய சிலைகளின் எண்ணிக்ைகயும்,கோயில்கள் நகைககள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதம் வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நகைகளின் எண்ணிக்கை, பதிவேற்றம் செய்ய வேண்டிய நகைககளின் எண்ணிக்கை விவரங்களை அறிக்கையாக அனுப்ப வேண்டும். கோயில்களில் உள்ள உலோக சிலைகளின் எண்ணிக்கை, கடந்த ஜூன் வரை புகைப்படம் எடுத்து பதிவு செய்யப்பட்ட உலோக சிலைகளின் விவரங்கள், தொல்லியல் துறையில் பதிவு செய்யப்பட வேண்டிய சிலைகளின் விவரங்களை அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

Related Stories:

More
>