×

கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு  ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவின் சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 30ஆயிரத்திற்கும் கீழாக குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 44,000க்கும்  மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,15,72,344 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், மாநிலங்கள் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது: கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு  ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவின் சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் அதிகபட்சம் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் பயணிக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், கேரளம் மற்றும் மகாராஷ்டிராவிற்குள் எந்தவொரு பயணியும் நோய்த் தொற்றுடன் நுழையக் கூடாது என்பதை ரெயில்வே அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பேருந்து நடத்துனர்களும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே பயணிகளை அனுமதிக்க வேண்டும். மருத்துவக் காரணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kerala ,Maharashtra , Corona test , Government of Karnataka, Order
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...