5% சேதாரம் சலுகையுடன் ஜோயாலுக்காஸின் ஆடி செயின் திருவிழா

சென்னை: ஜோயாலுக்காஸ் நிறுவனம் ஆடி செயின் திருவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயின் திருவிழா தமிழ்நாட்டின் அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூமிலும் நடைபெறுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான தங்க செயின்களுக்கும் வெறும் 5% சேதாரம் மட்டுமே. செய்கூலி இல்லை. இந்த செயின் திருவிழாவில் டெம்பிள் டிசைன்கள், வேதா கலெக்ஷன்கள், பாரம்பரியத்தை பறைசாற்றும் ரத்னா கலக்ஷன்கள், துருக்கியின் ஜெனினா. எத்னோ - மார்டன் டிசைன்களான அபூர்வா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு  கலெக்ஷன்கள் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து, ஜோயாலுக்காஸின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ‘தற்போதுள்ள விழா காலத்திற்கு ஏற்ப, தங்கத்தின் விலை நிலவரத்திற்கு ஏற்ப அமைந்த அற்புதமான சலுகை. டெய்லி வியர் முதல் ஸ்பெஷல் நிகழ்வுகள் வரை அனைத்திற்கும் ஏற்ற விதவிதமான செயின்களின் டிசைன்களை தேர்வு செய்து இந்த ஆடி செயின் திருவிழாவில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம்’ என்றார்.

Related Stories: