×

பி எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசண்ட் இன்ஸ்டிட்யூட் சார்பில் பி.ஏ. பொது கொள்கை என்ற புதிய கல்வி திட்டம் அறிமுகம்: கல்லூரி நிர்வாகம் தகவல்

சென்னை: ‘சிவில் சர்வீஸ்’ ஆர்வலர்களுக்கான புதுமையான பட்டப்படிப்புத் திட்டம் பி.எஸ். அப்துர் ரஹ்மான் க்ரெசண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில்  அறிமுகப்படுத்தப்பட்டது’ பி எஸ். அப்துர் ரஹ்மான் க்ரெசண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம், ‘பி.ஏ. பொது கொள்கை திட்டம்’ என்ற ஒரு புதிய கல்வித் திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்தது. பி.ஏ. பொது கொள்கை திட்டம் என்பது மாணவர்கள் தமது பட்டப்படிப்பினை பெறுவதோடு, அவர்கள் பட்டம் பெறும் நேரத்தில் சிவில் சர்வீஸஸ் சேவைகளுக்கும் தயாராவார்கள் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு சட்டத்தை மதிக்கும் பணித்துறைஞராக வருவதற்கு உருவாகும் விதத்தில் ஒரு புதிய வழியை வழங்குகிறது. பி.ஏ. பொது கொள்கை திட்டம், ஒரு பட்டப்படிப்பு மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகும் கூடுதல் நேரத்திற்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் பி.எஸ். அப்துர் ரஹ்மான் க்ரெசண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்திலிருந்து வருகை தந்திருந்த பிரமுகர்கள், துணைவேந்தர் டாக்டர் பிர் முகமது; பதிவாளர் டாக்டர்.ஏ.அசாத்; கூடுதல் பதிவாளர் டாக்டர் ராஜா உசேன் மற்றும் முன்னாள் உதவி. கமாண்டன்ட் (சிஆர்பிஎஃப்) மற்றும் பொது கொள்கை திட்ட இயக்குநர், இளஞ்செழியன் ஆகியோர் ஆவர். அவர்களுடன் டாக்டர் சந்தோஷ்பாபு, ஐ.ஏ.எஸ். (ஓய்வுபெற்ற) (1995 தொகுதி); வி.காமராஜா, ஐ.பி.எஸ் (ஓய்வுபெற்ற) (1987 தொகுதி) மற்றும் சஷிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ் (ஓய்வுபெற்ற) (2009 தொகுதி) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக வந்திருந்தனர்.

இந்த பட்டப்படிப்பினை குறித்துப் பேசிய டாக்டர் சந்தோஷ்பாபு, ஐ.ஏ.எஸ். அவர்கள், ”ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பது பல இளம் இந்தியர்களின் கனவாகும், இதை நீங்கள் எவ்வளவு விரைவாக செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக ஆண்டுகள் நீங்கள் நமது தேசத்தின் சேவையில் இருப்பீர்கள். பி.எஸ்.ஏ. கிரசன்டின் இந்த பி.ஏ. பொதுக் கொள்கை பட்டப்படிப்புத் திட்டமானது, யு.பி.எஸ்.சி.யின் கோரிக்கைகளுக்கு இணங்கும் வகையில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்வதற்கு பி.ஏ.(பொதுக் கொள்கை) உங்களுக்கு ஒரு இயற்கையான தேர்வாகும். உங்களின் 22 வயதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்றொரு கனவு உங்களுக்கு இருந்தால், 12 ஆம் வகுப்பு முடிந்தவுடனே இந்தப் பட்டப்படிப்பினை படிப்பதற்கு ஆயத்தமாக வேண்டும்” என்று கூறினார். சேர்க்கையைப் பற்றி அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், www.crescent.education இணையதளத்தைப் பார்வையிடவும்.

Tags : BS ,Abdur Rahman B.A. ,Crescent Institute , BS Abdur Rahman B.A. on behalf of Crescent Institute. Introducing a new curriculum called Public Policy: College Administration Information
× RELATED கிரசண்ட் கல்லூரி 13வது பட்டமளிப்பு விழா