போதை பொருட்கள் விற்பனை தடுப்பு ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பாக குட்கா பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கொண்டு செல்லுதல் தடையை அமல்படுத்துவதற்கான கூட்டுக்குழு கூட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தவிர்ப்போம், புற்றுநோய் வராமல் காப்போம் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர்லால் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் அரசு அலுவலர்கள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்களை முதல் முறை எச்சரிக்கப்படுகிறது. 2வது முறை சிறு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருட்களுக்கு தடை விதித்தால் மட்டுமே உற்பத்தி செய்வதை தடுக்க முடியும். உற்பத்தி செய்வதை தடுத்தால் மட்டுமே போதை பொருட்கள் விற்பனை செய்வதை முழுமையாக ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.   

Related Stories:

More
>