காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு..!!

சென்னை: காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு விடுமுறை இல்லாததால் மனவேதனை, மனசோர்வு அடைந்துள்ளனர். வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். காவலர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி இருப்பது அவர்களுக்கு இனிய செய்தி என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: