×

கொரோனா ஊடரங்கு அமல்: 5 நாட்களுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆகஸ்ட் 2 முதல் 4ம் தேதி வரை மலைக்கோயிலில் நடக்கும் தெப்ப உற்சவத்தை இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முருகப்பெருமானுக்கு கிருத்திகை மிகவும் உகந்த நாளாகும். அதிலும் ஆடி மாதம் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் பக்தர்கள் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் வழிபாடு செய்வார்கள்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

இந்த கோவிலில் பரணி மற்றும் ஆடிக்கிருத்திகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.  தற்போது கொரோனா ஊடரங்கு அமலில் உள்ளதால் அதிகளவில் மக்கள் கூடினால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் நடக்கும் விழாக்கள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை மலைக்கோவிலில் நடைபெறும் தெப்ப உற்சவத்தை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெப்ப உற்சவத்தை மாலை 5 மணியளவில் யூ டியூப் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியாளர் தெரிவித்தார்.

Tags : Corona Media Media ,Sami Visionary ,Temple ,Madhani Murugan , Corona, for 5 days, Rev. Murugan, vision, ban
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...