டோக்கியோ ஒலிம்பிக்ஸ் : ஹாக்கி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்காவை 4 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. லீக் சுற்றில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணிக்கு இது 2வது வெற்றியாகும். டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். தகுதிச்சுற்றில் அதிகபட்சமாக 64 மீட்டர் தூரத்திற்கு வட்டெறிந்து கமல்பிரீத் கவுர் இறுதிக்கு முன்னேறினார். ஆகஸ்ட் 2ல் நடைபெறும் மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் பதக்கம் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒலிம்பிக் குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். 48-42 கிலோ எடைப்பிரிவில் கொலம்பியாவின் ஹெர்னே மார்டினஸ் அமித் பங்கலை வீழ்த்தினார். டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார். ஜப்பான் வீரர் தகஹாருவிடம் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் அதானுதாஸ் தோல்வியடைந்தார்.

Related Stories:

>