அவதூறு பேச்சில் சிக்கிய கிறிஸ்தவ இயக்க நிர்வாகி மேலும் 2 வழக்கில் கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாற்று மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டீபன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் பல வழக்குகளில் இவர் ஆஜர் ஆகாமல் இருந்தார். இந்த நிலையில் நிலுவையில் இருந்த 2 வழக்குகளில் அவரை போலீசார் கைது செய்து, பத்மநாபபுரம்,  குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தூத்துக்குடி சிறைக்கு கொண்டு சென்றனர்.

Related Stories:

>