×

ஆவடி பகுதியில் ரூ.75 லட்சத்தில் நலத்திட்டங்கள்: அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: அண்ணனூர், கோணாம்பேடு, பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் புதிதாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக குடியிருப்புகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், குடியிருப்புகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி மக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், அவர்கள் தங்களது மின் தேவையை பூர்த்திசெய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.  இதுகுறித்து, கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை புகார்செய்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில், தற்போது திமுக ஆட்சி வந்தவுடன், ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரிடம் பொதுமக்கள் அதிக திறன்கொண்ட மின்மாற்றிகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர் இந்த பகுதிகளை ஆய்வுசெய்து புதிய மின்மாற்றிகளை அமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், மின்வாரியம் சார்பில் சிவசக்தி நகர், பவர் லைன் ரோடு, ஏ-செக்டர் 40 அடி சாலை, கோணாம்பேடு, பருத்திப்பட்டு மெயின்ரோடு, கோவர்த்தனகிரி ஆகிய 5 இடங்களில் ரூ.42 லட்சம் செலவில் 5 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதனை நேற்று காலை அமைச்சர் ஆவடி நாசர், மக்கள் பயன்பாட்டுக்கு இயங்கிவைத்தார்.

மேலும், திருமுல்லைவாயல், ஜாக் நகர் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் பணிகள், ஆவடி நாராயணபுரத்தில் ரூ.8 லட்சம் செலவில் ஆள்துளை கிணறு ஆகிய பணிகளுக்கு பூமிபூஜை போட்டு தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சங்கர், மின்வாரிய செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி செயற்பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், ராஜேஷ்கண்ணா, உதவி பொறியாளர்கள் சதீஷ், செந்தில், ஆவடி மாநகர திமுக செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், நிர்வாகிகள் சண்.பிரகாஷ், ஆர்.சுதாகரன், வெங்கடேசன், முல்லைராஜ், உதயகுமார், சுரேஷ், சிறுபதி, நாகராஜ், கோபால், செல்வம், பெருமாள், குணசேகர், இளங்கோ, தீனதயாளன், அரி, வின்சென்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Audie Region ,Minister ,Awedi Nassar , Avadi Area, Welfare Project, Minister Avadi Nasser
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...