ஓமன் அருகே இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்: 2 பேர் பலி

துபாய்: சமீபத்தில் வியட்நாமில் நடந்த அணு ஆயுத தயாரிப்புகளை குறைக்க நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் கப்பல்கள் மீது ஈரான் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. இந்நிலையில், அரபிக்கடலில் ஓமன் அருகே இஸ்ரேல் கப்பல் மீது கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக இங்கிலாந்து ராணுவம் தெரிவித்தது.  இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், `ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் மசிரா தீவு அருகே அரபிக்கடலில் கடந்த வியாழனன்று இரவு இஸ்ரேல் நாட்டின் வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் கப்பலில் இருந்து ஊழியர்கள் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

Related Stories: