2வது நாளாக அதிகரிக்கும் தொற்று: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,947 பேருக்கு கொரோனா: 27 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்தது. இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று 1,947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,27,611 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,193 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 1,56,843 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,934 ஆக உள்ளது.

Related Stories:

More
>