சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு: 10, 11ம் வகுப்பு மதிப்பெண்களில் கணக்கீடு !

சென்னை: சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதள முகவரியில் அறியலாம். கொரோனா பெருந்தொற்றால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 11ம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து விகிதாச்சார அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30 சதவீதம், 12ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவீதம் கொண்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண்களை மாணவர்கள் இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>