×

நடுவரின் தவறான முடிவிற்கு நிச்சயம் நீதி கேட்பேன்: மேரி கோம் ஆவேசம்

டோக்கியோ: ஒலிம்பிக் குத்துசண்டை போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவின் மேரி கோம், நடுவரின் ஒருதலைபட்சமான முடிவால்தான் தோல்வி அடைந்ததாகவும் இதற்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது போட்டியின் முதல் சுற்றில் இருவரும் ஆவேசமாக விளையாடியதாகவும் 2-வது மற்றும் 3-வது சுற்றில் நான் தான் வெற்றி பெற்றேன் என்றும் ஆனால் நடுவரின் முடிவு தவறாக இருந்தது என்றும் இதனை எதிர்த்து நீதி கேட்பேன் என்றும் மேரிகோம் கூறியுள்ளார்.

நடுவர்களின் நியாயமற்ற முடிவால் தான் நான் தோல்வி அடைந்தேன் என்றும் இதனால் ஒலிம்பிக்ஸ் தூதர் பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில் மேரி கோம் தான் வெற்றியாளர் என்றும் நடுவர்கள் புள்ளிக்கணக்கில் கணக்கிடும் முறையில் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடுவர்களின் முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : Mary Kom , I will surely seek justice for the arbitrator's erroneous decision: Mary Kom furious
× RELATED குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து...