உங்கள் கருத்துக்கள் செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும் : சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!!

டெல்லி :சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்ற இருக்கும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.நாட்டின் 75-வது சுதந்திர தினம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அந்நாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தனது உரையில் 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என மோடி கோரி வருகிறர். இதற்காக தனது சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்படி கூறுவது வழக்கம்.

அதன்படி வரும் சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்ற இருக்கும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பலாம் என்று மைகவ் (@mygovindia) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மைகவ் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் அலுவலக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

உங்கள் கருத்துக்கள் செங்கோட்டை கொத்தளத்தில் எதிரொலிக்கட்டும்.

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிரதமர் @narendramodi ஆற்ற இருக்கும் உரையில் உங்கள் பங்கு என்ன? அவற்றை @mygovindiaல் பகிருங்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>