×

பெகாசஸ் விவகாரத்தால் மீண்டும் அமளி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மாநிலங்களவையில் தொடரும் எதிர்ப்பு காரணமாக அவை 9 வது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. ஆனால் பெகாசஸ், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மக்களவையில் விரும்பத்தகாத செயல்களும் அரங்கேறின. குறிப்பாக காங்கிரசை சேர்ந்த குர்ஜீத் அஜாலா, பிரதாபன், ஹிபி ஈடன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை அலுவல் குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் மற்றும் கோஷங்கள் எழுதி வந்த அட்டைகளை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினர்.இதைப்போல ஆளுங்கட்சி எம்.பி.க்கள் இருந்த பகுதியை நோக்கியும் அவர்கள் வீசினார்கள். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எனவே அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். கூடுதலாக, அவையில் பேனர்களை எடுத்துச் சென்று சத்தம் போடுவதாக புகார்கள் வந்துள்ளன. இவை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவைத் தலைவர், நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

Tags : Lok Sabha , Pegasus, Lok Sabha, Adjournment
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...