×

சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம்-வாகனஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இச்சாலை வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோரம் தீவனம் உட்கொண்டிருந்த 3 யானைகள் சாலையை கடந்து செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தன.

அப்போது சாலையில் வாகனங்கள் சென்றதால் சிறிது நேரம் காத்திருந்த காட்டுயானைகள் லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் சென்றபின் சாலையில் வாகனங்கள் வருகிறதா என பார்த்துவிட்டு மெதுவாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வதைக் கண்ட சாலையில் வந்த சரக்கு வாகன ஓட்டிகள் காட்டு யானைகள் சாலையை கடந்து செல்லும் வரை காத்திருந்து பின்னர் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபின் புறப்பட்டுச் சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை மித வேகத்தில் இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Forest Department ,Sathyamangalam Highway , Satyamangalam: The Satyamangalam Tiger Reserve is home to a wide variety of wildlife including elephant, tiger, leopard, deer, bear and wildebeest.
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...