கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய பெண்களின் ஊட்டச்சத்து சரிவு : அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்

வாஷிங்டன்: கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய பெண்களின் ஊட்டச்சத்து எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியது என்று, அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச், பீகார் மாநிலம் முங்கர், ஒடிசா மாநிலம் காந்தமால், கலஹந்தி ஆகிய நான்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், அமெரிக்காவை சேர்ந்த டாடா-கார்னெல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, கொரோனா  தொற்றுநோயால் 2020ம் ஆண்டு மார்ச்சில் தொடங்கிய நாடு தழுவிய ஊரடங்கால் பெண்களின் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வின் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், வீட்டிற்கு தேவையான உணவு செலவுகள் மற்றும் பெண்களின் உணவு பன்முகத்தன்மை குறைந்துள்ளது. இறைச்சிகள், முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. சிறப்பு பொது விநியோக முறை (பிடிஎஸ்) மற்றும் அங்கன்வாடி மூலம் பெண்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்ட போதும், சத்தான உணவுகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தொற்றுநோய் பரவலுக்கு முன்பே, இந்த பெண்களுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்குக்கு பின், அவர்களின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தொற்றுநோய் பாதிப்புக்கு மத்தியில், பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்திற்கு, தனியான கொள்கைகளை வகுக்க வேண்டும். பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக, அவர்களின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை மேம்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

>