×

சமூகநீதியை காப்பதில் கலைஞர் வழியில் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளார்!: மருத்துவர் சங்கத்தினர் பாராட்டு

சென்னை: சமூகநீதியை காப்பதில் கலைஞர் வழியில் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளதாக மருத்துவர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளார். அரசு மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ்., படிப்புகளில் 59% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏ.பி.பி.எஸ்., படிப்பில் தனி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரினோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Tags : MK Stalin , Social Justice, MK Stalin, Victory, Medical Association
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...