உயிருக்கு போராடி வரும் சிறுவனை காப்பாற்ற கைகோர்த்த மக்கள்: கோவை அருகே நெகிழவைக்கும் கிராமம்

கோவையில் இருதய செயலிழப்பால் உயிருக்கு போராடி வரும் சிறுவனை காப்பாற்ற கிராம மக்கள் ஒன்றிணைந்து களமிறங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கரையை அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் 12 வயது மகன் பிரித்திவ் ராஜ் அங்குள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். 4 மாதங்களுக்கு சளி, இருமலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த பரிசோதனையில் இருதயம் செயலிழந்ததை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்று அறுவை சிகிச்சைக்கு 25 லட்சம் ரூபாய் தேவை என்ற நிலையி சிறுவனின் குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளனர் அவன் வசிக்கும் குரும்பம்பாளையம் கிராம மக்கள்.

சிகிச்சைக்காக வீடு வீடாக சென்று நிதி திரட்டும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் உதவி வேண்டி அழைப்பு விடுத்துள்ளனர். சிறுவனின் சிகிச்சைக்கு உதவ நினைப்பவர்கள் 90802 20145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவனது வீட்டிற்கு நாள்தோறும் வரும் கிராம மக்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவி அளித்து வருகின்றனர். இதுவரை 5 லட்சம் ரூபாய் வசூலான நிலையில் சிறுவனின் சிகிச்சை குறித்து தமிழக முதலமைச்சரின் சிறப்பு பிரிவுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மனு அளித்துள்ளனர். உயிருக்கு போராடும் சிறுவனை காப்பாற்ற அரசு மட்டுமின்றி கருணை உள்ளங்களும் உதவ வேண்டும் என்பது தான் குரும்பம்பாளையம் மக்களின் எதிர்பார்ப்பு.

Related Stories: