இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் தாலிபான்களால் உயிருடன் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார் :அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானில் அரசுப்படை மற்றும் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் தற்செயலாக குண்டு பாய்ந்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் தீவிரவாதிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் எக்ஸாமினர் இந்த பரபரப்பான செய்திகளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஜூலை 16ம் தேதி இந்திய செய்தியாளரான டேனிஷ் சித்திக், ஆப்கன் படைகள் மற்றும் தாலிபான்கள் இடையிலான மோதல்கள் குறித்து செய்தி சேகரிக்க ராணுவத்துடன் சென்றார்.

அப்போது இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சித்திக் படுகாயம் மட்டுமே அடைந்ததாக வாஷிங்டன் எக்ஸாமினர் தெரிவித்துள்ளது. காயம் அடைந்த சித்திக்கை அருகில் உள்ள மசூதி ஒன்றுக்கு அழைத்து சென்ற ஆப்கான் ராணுவத்தினர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்ட தாலிபான்கள் மசூதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி செய்தியாளர் டேனிஷ் சித்திக்கை உயிருடன் சிறைப்பிடித்ததாகவும் அவரது அடையாளத்தை தெரிந்து கொண்ட பிறகு சித்திக்கை சுட்டுக் கொன்று விட்டதாகவும் வாஷிங்டன் எக்ஸாமினர் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது அவருடன் இருந்த ஆப்கன் படை வீரர்கள் சிலரையும் தாலிபான்கள் கொன்றுவிட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: