கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் உறுதி: அறிவுரைகழகம் உத்தரவு

சென்னை: சமூக வலைதளங்களில் உண்மை தன்மையில்லாத, சர்சைக்குரிய வகையில் பேசி அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருபவர் கே.கே.நகரை சேர்ந்த கிஷோர் கே.சாமி. இவர்  அண்ணா, கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு  செய்து வந்தார். இவரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைந்துள்ள, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விசாரிக்கும், அறிவுரைகழகத்தில், கிஷோர் கே.சாமி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அறிவுரைகழகத்தின் தலைவர் மலைசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், குற்றச்சாட்டுகள் உண்மை மற்றும் குண்டாசுக்கு உகந்தது என்பது நிரூபணமானதையடுத்து, கிஷோர் கே.சாமி மீதான குண்டாசை உறுதி செய்து, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

Related Stories: