1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஆசாமி கைது

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் ரேஷன் அரிசியை கொண்டு வந்த ஒருவரை மறித்தனர். விசாரணையில், வாலாஜாபாத் அடுத்த பாலூரை  சேர்ந்த சரவணன். குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, பாலூரில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தியத்தில்,  சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கியது தெரிந்தது. அதனை போலீசார், பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை, கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>