×

சென்னையில் வீதி வீதியாக சென்று மனநலம் பாதித்தவர்களை மீட்டார் அமைச்சர்: உணவு வழங்கி, சிகிச்சையளிக்க அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு வாகனத்தில் தண்டையார்பேட்டையில் வீதி வீதியாக சென்று, மனநலம் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, அவர்களை மீட்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர கவனிப்பு மற்றும்  மீட்பு மையத்தில் சேர்த்து உணவு வழங்கி, தேவையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  தேசிய நலவாழ்வு மையத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 1021 பேர் மீட்கப்பட்டு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 400க்கும் மேற்பட்ட மனநலம் பாதித்தவர்கள் பல்வேறு தெருக்களில் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில், தேசிய நலவாழ்வு மைய குழு இயக்குநர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் உருவான மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதை தொடர்ந்து, வடசென்னை பகுதியில் 2 பேரை கண்டறிந்து இம்மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. முதலில் அவர்களது உடல் நலனை மருத்துவர்கள் ஆராய்ந்து சிகிச்சை அளித்த பிறகு, அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசிகள் போடப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர் மற்றும் தேசிய நலவாழ்வு மைய குழும இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Chennai , Mentally ill, minister, caterer, therapist
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...