ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கு நிதி ஒதுக்க கோரி மனு விசாரணையிலிருந்து விலகுவதாக நீதிபதிகள் அறிவிப்பு: தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றம்

சென்னை: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக  கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், பதிவாளரை நியமிக்க கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தர் நியமிக்கப்பட்டு பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் கடந்த அரசால் ஒத்துக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை இந்த பல்கலைக்கழகம் பழைய தாலுகா அலுவலகத்திலேயே செயல்பட்டுவருகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக  தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு வரும் திங்கட்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories:

>