அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வழக்கை தள்ளுபடி செய்ய ஐகோர்ட்டுக்கு தமிழக அரசு கோரிக்கை

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை சிஐடி நகரை சேர்ந்த ஸ்ரீதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்ட பிரிவினரை தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்வது ஆகம விதிகளுக்கு முரணானது என்பதால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவாச்சாரியார்கள் வழக்கில் ஆகம விதிகள் படித்த அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக்காட்டி இந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்தார். உச்சநீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்துவிட்டு வாதங்களை முன்வைக்கும் படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

>