மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் கிடைக்கச் செய்வது மாநில அரசின் கடமை: தலைமை நீதிபதி கருத்து

சென்னை: மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் கிடைக்கச் செய்வது மாநில அரசின் கடமை என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். குள்ளப்பகவுண்டன்பட்டியிலிருந்து ஏத்தகோவில் வரை விவசாயத்திற்காக குழாய் மூலம் தண்ணீர் வழங்க மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் தண்ணீர் எடுப்பது பற்றி ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>