×

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது வரவேற்கத்தக்கது: அண்ணாமலை பேட்டி

நாகர்கோவில் : திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். நாகர்கோவிலில் இன்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம் திருக்குறளை கோடிட்டு காண்பிக்கிறார். எனவே வெகுவிரைவில் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படலாம்.

அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். எங்கள் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை.பெகாசஸ் மென்பொருள் மூலம் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்ேகட்பு என்பது காங்கிரஸ் கட்சியின் நாடகம். ராகுல்காந்திக்கு வேறு வேலை இல்லாததால் தொலைபேசி ஒட்டுக்கேட்பு என கூறி வருகிறார். பல்வேறு குழுவாக பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைத்து வலுப்படுத்தும் பணியை ராகுல்காந்தி செய்ய வேண்டும் என்றார்.

Tags : Minister ,Gold South Kingdom , அமைச்சர் தங்கம் தென்னரசு
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...