×

கல்வி தொலைக்காட்சியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை : கல்வி தொலைக் காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட  அறிக்கையில்,

தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில், பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், பள்ளி மாணவர்களின் வீட்டிற்கு சென்று மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்துகிறார்களா எனவும் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கல்வி தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழலில், அரசு பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்க கூடாது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : கல்வி தொலைக் காட்சி
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...