×

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா?

* 58 கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை முழுகொள்ளளவை எட்டிய நிலையில். அணையில் இருந்து 58ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நேற்று முன்தினம் நிரம்பியது. இந்நிலையில் அணையில் உபரி நீர் பாசனத்திற்காக கால்வாயிலும், நிலத்தடிநீருக்காக ஆற்றிலும் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள 58ம் கிராம கால்வாயில் தண்ணீர் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கு மேலே உயரும் போது தான் இந்த 58ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்ற வகையில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.

 67 அடிக்கு கீழே சரிந்தால் இந்த கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாது. தற்போது வைகை அணை 69 அடியாக உயர்ந்துள்ளதால், 58ம் கிராம கால்வாயில் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்தாலே உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராமங்கள் பயனடையும். எனவே, அணையில் தண்ணீர் இருப்பு உள்ள போதே, 58ம் கால்வாயில் தண்ணீரை திறக்க வேண்டும், என்றனர்.

Tags : Vaigai Dam ,Canal 58 , Andipatty, Vaigai Dam,58 Canal Way
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு