ஆழ்கடலை தூய்மைப்படுத்தும் 7 வயது சிறுமி.. நீலாங்கரையில் இருந்து ராமேஸ்வரம் வரை சுத்தம் செய்ய திட்டம் : குவியும் பாராட்டுக்கள்!!

சென்னை : சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் ஆழ்கடல் பகுதியில் உள்ள நெகிழிகளை சேகரித்து கடலை சுத்தம் செய்து வருவது பாராட்டுகளை பெற்று வருகிறது. சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த நீச்சல் வீரரின் 7 வயது மகள் ஆராதனா. சிறு வயதில் இருந்தே கடல் மற்றும் அதை சார்ந்த விவகாரங்களில் அதிக ஆர்வம் உடையவர். தனது விடுமுறை நாட்களில் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வந்தவர்.

தற்போது கடலுக்குள் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி கடலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். நீலாங்கரையில் இருந்து ராமேஸ்வரம் வரை இந்த பணியை அவர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பாலீத்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கடலை சுத்தம் செய்து வரும் ஆராதனாவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Related Stories:

More
>