×

வானில் பலவித உருவங்களை உண்டாக்கி 300 மிளிரும் டிரோன்கள் வர்ணஜாலம் : புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் பிரிட்டன் நிறுவனம்!!

லண்டன் : இங்கிலாந்தில் தனியார் நிறுவனம் ஒன்று வாண வேடிக்கைக்கு மாற்றாக டிரோன்களை கொண்டு வானில் வர்ணஜாலம் நிகழ்த்தி வருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான செலஸ்டியல் வாண வேடிக்கைகளுக்கு மாற்றாக மிளிரும் டிரோன்களை வானில் காட்சிப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. பல்வேறு நாடுகளில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒளிரும் டிரோன் கண்காட்சி நடத்தப்படும் நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்த டிரோன்கள் வர்ணஜாலம் காட்டின.

இதையே தொழிலாக கொண்டுள்ள செலஸ்டியல் நிறுவனம், இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது.300 மிளிரும் டிரோன்களை வைத்து கொண்டு வானில் பலவித உருவங்களை மிதக்க விடுகிறது இந்த குழு. வாண வேடிக்கைகள் நமக்கு பிடிக்கும் என்றாலும் அதனால் மாசு, தீ விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி விலங்குகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என செலஸ்டியல் இணை நிறுவனர் கூறுகிறார். இதனை கருத்தில் கொண்டே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை கொண்டு இயங்கும் இந்த டிரோன்களை வாண வேடிக்கைகளுக்கு மாற்றாக கொண்டு வர தாங்கள் விரும்புவதாகவும் அந்த குழுவினர் கூறுகின்றனர்.

Tags : வர்ணஜாலம்
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...