×

நாடு முழுவதும் உள்ள 6045 ரயில் நிலையங்களில் இதுவரை வைஃபை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன : ஒன்றிய அரசு தகவல்!!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த ரயில்வே,  தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

*ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல், ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகளை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 6045 நிலையங்களில் இது வரை வைஃபை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

*தெற்கு ரயில்வேயில் மட்டும் 542 ரயில் நிலையங்களில் இது வரை வைஃபை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

*அகலப்பாதை ரயில் தடங்களை மின்மயமாக்குவதை துரிதகதியில் மேற்கொள்ள இந்திய ரயில்வே முடிவெடுத்தது. இதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

*2020 ஏப்ரல் 1 வரை, 51,165 கிலோமீட்டர் நீளத்திலான ரூ 7.54 லட்சம் கோடி மதிப்புடைய 484 ரயில்வே திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. 2021 மார்ச் வரை ரூ 2,13,815 கோடி மதிப்பீட்டில் 10,638 கிலோமீட்டருக்கான ரயில்வே திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

*தெற்கு ரயில்வேயை பொருத்தவரை, மொத்தமுள்ள அகலப்பாதை தடங்களின் அளவு 4,914 ரூட் கிலோமீட்டராகும். இதில் 3,570 ரூட் கிலோமீட்டருக்கான அகலப்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. 1,344 ரூட் கிலோமீட்டருக்கான அகலப்பாதை மின்மயமாக்கப்படும்.

*2021 ஏப்ரல் 1 வரை, 2,011 கிலோமீட்டர் நீளத்துக்கான ரூ 74,485 கோடி மதிப்புடைய திட்டங்கள் வடகிழக்கு பகுதியில் பல்வேறு கட்டங்களில் உள்ளன. 2021 மார்ச் வரை 321 கிலோமீட்டர் நீளத்துக்கான ரூ 26,874 கோடி மதிப்புடைய திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

*1,181 கிலோமீட்டர் நீளத்துக்கான ரூ 56,553 கோடி மதிப்பிலான 14 புதிய வழித்தட திட்டங்களில், 253 கிலோமீட்டர் நீளத்துக்கான ரூ 23,994 கோடி மதிப்பிலான திட்டங்கள் 2021 மார்ச் வரை நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

*830 கிலோமீட்டர் நீளத்துக்கான ரூ 17,932 கோடி மதிப்பிலான 6 இரட்டிப்பு திட்டங்களில், 68 கிலோமீட்டர் நீளத்துக்கான ரூ 2,880 கோடி மதிப்பிலான திட்டங்கள் 2021 மார்ச் வரை நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

*2009-14 ஆண்டுகளுக்கான சராசரியான வருடத்திற்கு 66.6 கிலோமீட்டருடன் ஒப்பிடும் போது, வருடத்திற்கு 193.71 கிலோமீட்டர் எனும் அளவில் 94 சதவீதம் அதிகமாக 2014-21 ஆண்டுகளில் 1356 கிலோமீட்டருக்கான திட்டங்கள் வடகிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) மூலம் ரயில்களில் உணவு சேவைகள் வழங்கப்படுகின்றன. சுற்றுலாவை பொருத்தவரை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மற்றும் மாநில சுற்றுலா வளர்ச்சி கழகங்களுடன் இணைந்து பல்வேறு சுற்றுலா திட்டங்கள் மற்றும் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.

*பயணச்சீட்டு வழங்கும் முறையை எளிதாக்குவதற்காக, பயணச்சீட்டு மையங்கள், தானியங்கி இயந்திரங்கள், செயலி, அங்கீகாரம் பெற்ற முகவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*இதற்கிடையே, ரயில்வேயில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக, ஊக்கத்தொகைகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சிறப்பு பணப் பரிசு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

*தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ 3 கோடி, வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு ரூ 2 கோடி, வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு ரூ 1 கோடி, எட்டாவது இடம் வரை பிடிப்பவர்களுக்கு ரூ 35 லட்சம், பங்குபெறுவோருக்கு ரூ 7.5 லட்சம், தங்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ 25 லட்சம், வெள்ளி வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ 20 லட்சம், வெண்கலம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ 15 லட்சம், இதர வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ரூ 7.5 லட்சம் வழங்கப்படுகிறது.

*டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ள மொத்த இந்திய வீரர்களில் 20 சதவீதம் பேர் ரயில்வேயை சேர்ந்தவர்கள் ஆவர். இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் கிட்டத்தட்ட அனைவருமே ரயில்வே வீராங்கனைகள் ஆவர்.

Tags : Government , அஷ்வினி வைஷ்ணவ்
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...