×

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் மீதான வழக்கு முடித்து வைப்பு: சிறப்பு கோர்ட் உத்தரவு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட  தோழமைக் கட்சிகள் 2018ம் ஆண்டு  முழு அடைப்புப் போராட்டமும்,  ஆர்ப்பாட்டமும் நடத்தினர். சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், தலைமையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,  விசிக  தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதேபோல எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவானது.

இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அனைத்து தலைவர்கள் மீது திருவல்லிகேணி காவல் நிலையத்தில் பதிவான வழக்கை திரும்பப்பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Cauvery Management Board ,MK Stalin ,Coalition , Cauvery Management Board, Struggle, MK Stalin, Case, Special Court Order
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...