×

30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி திருந்தி வாழ அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு

சென்னை: தண்டையார்பேட்டை வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ரவி (எ) கல்வெட்டு ரவி(42). வடசென்னையில் பிரபலமான ரவுடியாக வலம் வருகிறார். இவர் மீது திமுக வட்டச்செயலாளர் சண்முகம் கொலை உட்பட 3 கொலைகள், 4 கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு என சென்னை முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளது. பிரபல ரவுடி என்பதால் இவர் சிறையில் இருந்தாலும், இவரது ஆதரவாளர்கள் இவர் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அந்த அளவிக்கு இவர் ரவுடிசத்தில் பலம் வாய்ந்தவாராக உள்ளார்.
சென்னை மாநகர காவல்துறையின் என்கவுன்டர் பட்டியலில் இவர் முதல் 4 இடத்தில் உள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி ஆயிரம் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது தனது பாதுகாப்புக்காக ரவுடி கல்வெட்டு ரவி தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைந்தார். அதன் பிறகும் அவர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை தேர்தலின்போது போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பிரபல ரவுடி கல்வெட்டு ரவி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதனை தனது குடும்பத்துடன் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், நான் வறுமை காரணமாக சிறு வயதில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தேன்.

அதற்கான நான் பல முறை சிறைக்கு சென்று தண்டனை அனுபவித்து வந்தேன். தற்போது நான் திருத்தி வாழ விரும்புகிறேன். ஆனால் எனது பெயரை தவறாக பயன்படுத்தி வடசென்னையில் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ரவுடி தொழிலை விட்டுவிட்டு  ரியல் எஸ்ேடட் தொழில் செய்து எனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறேன். எனவே நான் திருந்தி வாழ வாய்ப்பு வழங்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Ravi Thirunthi ,Commissioner of Police , Famous Rowdy, Inscription Ravi, Commissioner of Police,
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...