மநீம கட்சியில் இருந்து பலர் வெளியேறுவது ஏன்? கமல்ஹாசன் பேட்டி

சென்னை: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றி, ஒன்றிய அரசு டெல்லியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்நிலையில் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன், அளித்த பேட்டி: டெல்லியில் நடந்த மீட்டிங்கில் விசாரித்தவர்கள் பேச்சு சுதந்திரத்திலும், சிந்தனை சுதந்திரத்திலும் மிகவும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தது எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யமும் தயாராகி வருகிறது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ‘உங்கள் கட்சியில் இருந்து நிறையபேர் வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே?’ என்று கேட்டதும் பதில் சொல்லாமல், அவசரமாக பேட்டியை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

Related Stories:

More
>