கடன் வழங்கும் விழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு  வங்கிக் கடன் வழங்கும் விழா நேற்று  நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட இயக்க மேலாண்மை நிதி உள்ளாக்க உதவி திட்ட அலுவலர் வீரமணி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்துகொண்டு 18 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1.03 கோடி மதிப்பிலான வங்கி கடன் நிதி உதவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க கீரை விதைகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவைகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சாலவாக்கம் ஊராட்சி செய்திருந்தது.

Related Stories:

More
>