வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் நிலையில் உள்ள 3வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>