கண்ணமங்கலம் அடுத்த சந்தனகொட்டா தஞ்சியம்மன் உற்சவமேனி கோயில் கும்பாபிஷேகம்

கண்ணமங்கலம்: ேவலூர் மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த சந்தனகொட்டா ேகாட்டிக்கல் மலையடிவாரத்தில் ஸ்ரீகன்னியம்மன் மற்றும் தஞ்சியம்மன் ேகாயில் உள்ளது. இக்கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள அம்மன் உற்சவ திருமேனி கும்பாபிஷேகம் இன்று காலை 9மணிக்கு நடைபெற்றது. முன்னதாக காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையும் வருஷாபிஷேக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் வந்தவாசி லட்சுமண சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காத்தவராயன், பொருளாளர் அசோகன், செயலாளர் முருகன், துணைத்தலைவர் வடிவேல், நிர்வாகிகள் முருகேசன், குமரவேல், நிசாந்த் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை ஊரணி பொங்கலும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>